பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான வீடுகளில் சோலார் கூரை அமைப்பு நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,021 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரு கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை 30,000 ரூபாயும், அடுத்த ஒரு kW-க்கு கூடுதலாக 18,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.