திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேகரித்து வைக்கப்படும் பயோமெடிக்கல் வேஸ்டேஜ் கழிவுகள் அனைத்தையும் துப்புரவு பணியாளர்கள் கையுறைகள் முககவசம் அணியாமல் எடுத்து வருகின்றனர். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மேற்பார்வையாளர் இளவரசன் அவர்களை வேலை வாங்குவதை மட்டுமே குறியாக வைத்துள்ளார். அவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொள்வதில்லை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
துப்புரவு பணியாளர்களும் மனிதர்கள் தான் என்று எண்ணும் அதிகாரிகளுக்கு இல்லை அவர்களுக்கும் குடும்பம் உள்ளது அவர்களுக்கென உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் அவர்களும் நோயின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.