வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் கருவூலம், போலீஸ் சப்-டிவிஷன் (டி. எஸ். பி. அலுவலகம்), மற்றும் நீதிமன்ற வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட எந்தவொரு அரசு அலுவலகங்களும் இல்லாமல் சுமார் 12 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதமாக இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், பட்டு தேவாநந்த் ஆகியோர் அணைக்கட்டில் கோர்ட்டு கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்வதற்காக வந்தனர். கெங்கநல்லூர் முருகன் கோவில் அடிவாரம், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சுற்றுலா மாளிகை (வனவர் குடியிருப்பு) வளாகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டனர். அதேபோல், ஏற்கனவே 2013-ம் ஆண்டு தற்காலிகமாக இயங்கி வந்த பழைய தாலு்கா அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கெங்கநல்லூர் முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள இடம் போக்குவரத்திற்கு போதிய வசதி இல்லாததால் நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு உகந்த இடம் இல்லை என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்யவில்லை.
இதையடுத்து, ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வனவர் குடியிருப்பு இடத்தினை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.