வாணியம்பாடியில் கூட்டு தூய்மை பணி!

52பார்த்தது
வாணியம்பாடியில் கூட்டு தூய்மை பணி!
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் பருவமழையை முன்னிட்டு டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் கூட்டு தூய்மை பணி மற்றும் டெங்கு கொசு உற்பத்தியை கண்டறிந்து அகற்றும் பணி நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி கூட்டு தூய்மை பணி நடந்தது. அப்போது டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்களான டயர், கொட்டாங்குச்சி, அட்டைகள் உள்ளிட்டவை இருந்தால் அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நகரப் பகுதியில் கூட்டுத் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொசு புழுக்கள் உற்பத்தியாக கூடிய தேவையற்ற பொருட்கள் வைத்திருந்த நிறுவனங்கள், வணிக வளாகங்கள் வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி