திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி அறக்கட்டளை தலைவர் கே. எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார். அறக்கட்டளை கௌரவ தலைவர் பேராசிரியர் அப்துல்காதர், துணைத் தலைவர்கள் ஆர். ஆர். வாசு, வேலு, துணை செயலாளர் பார்த்திபன், பொருளாளர் ராஜேந்திரன், துணை பொருளாளர் சூரியா உள்ளிட்ட அறகட்டளை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் டி. வெற்றிவேலன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் பா. ரவி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு நீதிதுறை இயக்குநர் டாக்டர். ஆர். சத்யா கலந்துக் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகளையும், மேலும் பாடவாியாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு கேடயமும், தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.