வாணியம்பாடியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் வீட்டிற்கு வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு. வேலையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் புகார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். 34 வயதுடைய இவருக்கு தாய் தந்தை யாரும் இல்லாத நிலையில் தன் சகோதரர் வீட்டில் வசித்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னை , ஆம்பூர் , வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்ததுள்ளர். அதன் பின்பு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவருக்கு 3 மாதங்களாக வேலை கொடுக்கவிலை என்று கூறப்படுகிறது.
தற்போது இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இவர் தனக்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று இவருக்கு மேல் பொறுப்பில் உள்ளவர்களிடம் பேசியுள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் கூறும் இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் வேலையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நேற்று இரவு உறங்க சென்றவர் இன்று(செப்.5) காலை மயங்கிய நிலையில் இறந்துள்ளார்.