*சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பத்தூரில் வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கோலாகல கொண்டாட்டம். *
தமிழகத்தில் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிக நிறுவன தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து இன்று திருப்பத்தூர் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேலூர் மண்டல செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட கட்சி அலுவலகத்திலிருந்து ஜின்னா ரோடு வரை ஊர்வலமாக சென்று பட்டாசுகள் வெடித்து அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர்.
அப்போது திருப்பத்தூர் நகர செயலாளர் சு. ஆனந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கோ. பார்த்தீபன், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல்அமர்நாத்,