திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குருசீலாபட்டு பகுதியை சார்ந்த தக்ஷிணாமூர்த்தி. இவரது மனைவி மீனாட்சி. திருப்பத்தூரில் இருந்து பொருட்களை வாங்கி எடுத்து இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். தனது மனைவியுடன் பெரியார் நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென திரும்பியதால் பின்னே சென்று கொண்டிருந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மீனாட்சி தவறி கீழே விழுந்தால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீனாட்சியை மீட்டு நேற்று (செப்.13) 108 ஆம்புலன்ஸின் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருசலாப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.