இந்திய அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் போட்டியில் 249 ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பெத்தேல் 51 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.