திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

76பார்த்தது
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு பணியையும் சரிவர செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல மாதங்களாக நகர மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் நடைபெற்று வருகின்றது. தொடர் கூட்டத்தில் பேசப்பட்டாலும் இதுவரை அவர்கள் சரிவர கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, தெருநாய் தொல்லை, உள்ளிட்ட எந்த ஊரு மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல கூட்டங்களில் கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் நகர மன்ற தலைவர் இடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இது போன்ற பிரச்சினைகள் நடைபெற்று வருவதால் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகராட்சியின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இன்று(செப்.19) வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழலுக்கு அனுப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி