அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

81பார்த்தது
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (மார்ச்.17) முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று (மார்ச்.17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி