திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் பகுதியைச் சார்ந்த நெப்போலியன் (43). இவருக்கு சொந்தமான நிலம் அருகில் சஞ்சய் கார்த்தி வயது (33) வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற்று மண் எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து நெப்போலியன், கோவிந்தன் ஆகிய இருவரும் சஞ்சய் காந்தியிடம் மண் எடுத்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சஞ்சய் காந்தி கோவிந்தனை தாக்கியுள்ளார். கோவிந்தன் அதில் காயமடைந்துள்ளார்.
இது குறித்து நெப்போலியன் அளித்த புகாரின் பேரில், சஞ்சய் காந்தியை வெள்ளிக்கிழமை நேற்று (செப்.13) 8 மணி அளவில் கந்திலி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.