கலைத்திருவிழாவில் தவில் வாசித்த எம் எல் ஏ நல்லதம்பி

74பார்த்தது
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலை பண்பாட்டு இயக்கத்தின் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வரும் நிலையில்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தர்மபுரி சாலை வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி அருகே சட்டமன்ற உறுப்பினர் தம்பி தலைமையில் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தவில் வாசித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்ததை தொடர்ந்து அனைத்து நாட்டுபுற கலைஞர்களும் நல வாரிய அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் 20 பேர் 50 பேர் என்று மொத்தமாக வந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக நலவாரிய அட்டையை உடனடியாக உங்களுக்கு வழங்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம் குதிரை ஆட்டம் மயிலாட்டம் தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பெரியவர்களே பார்ப்பதற்கு ஈடுபாடு காட்டாத நிலையில் இதைக் காண வந்த குழந்தைகள் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி