சாலை அமைத்து தர விட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மலைவாழ் மக்கள் எச்சரிக்கை.
சாலைவசதி
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜவ்வாதுமலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,
புதூர்நாடு ஊராட்சியில் 10&க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், விளாங்குப்பம் மலைக்கிராமத்தில் கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இந்த பகுதியில் 300&க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் மற்றொரு பகுதிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். நடுகுப்பம் பகுதியில் இருந்து விளாங்குப்பம் வரை 4 கி. மீ. , தொலைவு உள்ள சாலையையும், கம்புக்குடி பகுதியில் இருந்து கொத்தனூர் வரை 1 கி. மீ. , தொலைவு உள்ள தார்ச்சாலையை அமைத்து தராவிட்டால் வருகிற 23, 24& ந் தேதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனர்.