அரசு கட்டிட கட்டுமான தொழிலாளர் தலைவர் பொன் குமார்

52பார்த்தது
திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பேச்சு.


திருப்பத்தூரில் ஹவுசிங் போர்டு பகுதியில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக வீரப்பன், மாவட்ட செயலாளராக தாமோதரன், மாவட்ட பொருளாளராக சங்கர் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பொன்குமார்-

கட்டுமான தொழில் நாட்டு வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வேலை தேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமல் , படிப்பு, நேர்காணல், சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல் உடனடியாக வேலை கொடுக்கும் தொழில் கட்டுமான தொழில் தான்.
ஆனால் சிமெண்ட், மணல் மற்றும் டோல்கேட் விலை உயர்த்துவது.
தங்கம் வைரத்திற்க்கு 5 சதவீத ஜி எஸ். டி வரி
ஆனால் கட்டுமான பொருட்கள் சிமெண்ட் சுன்னாம்பிற்கு 27 சதவீத ஜி. எஸ். டி விதித்தால் எப்படி தொழில் வளர்ச்சி ஏற்படும்
என்று கேள்வி எழுப்பி பொன்குமார் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி