திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன் இவரது மகன் பழனி 32இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் கட்டிட மேஸ்திரி வேலை பார்த்துவருகின்றார் சில வருடங்களுக்கு முன்பு கருநாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் பொழுது. ஒரு கொலை வழக்கில் ஈடுப்பட்டதாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து இவரது சொந்த ஊரான காமராஜ் நகர் பகுதியில் தனியாக இவரது வீட்டில் வசித்து வந்தார் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது இவர் சுமார் நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் வந்ததாக கூறப்படுகிறது இவர் ஊத்தங்கரை பகுதியில் கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் மன வேதனையில் பழனி வேலைக்கு செல்லாமல் மது போதையில் இவரது வீட்டிற்குள் கதுவை தாளிட்டு கொண்டு யாவரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்க்கும் பொழுது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் கந்திலி போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து கதுவை உடைத்து சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்