கிணற்றில் விழுந்த பெண் குட்டி புள்ளிமான் உயிருடன் மீட்பு

81பார்த்தது
வேலூர் மாவட்டம்

கே. வி. குப்பம் அருகே 50 அடி விவசாய கிணற்றில்  விழுந்த ஆறு மாத பெண் குட்டி புள்ளிமான் உயிருடன் மீட்பு.    


வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு கிராமத்தில் விவசாயி வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது

இந்த நிலையில் தண்ணீர் தேடி வழி தவறி ஊருக்குள் வந்த 6 மாதம் ஆன குட்டி புள்ளி மான் ஒன்று அந்த கினற்றில் தவறி விழுந்ததுள்ளது

இந்த நிலையில் வெங்கடேசன் கிணற்றின் அருகில் உள்ள பம்பு செட் இயக்க சென்ற போது கிணற்றில் உள்ள நீரில் குட்டி புள்ளிமான் ஒன்று தத்தரித்து கொண்டு இருந்ததை கண்டார் உடனடியாக அவர் கிணற்றில் இறங்கி தத்தளித்துக் கொண்டிருந்த 6 மாத பெண் புள்ளி குட்டி மானை மீட்டு  கரைக்கு கொண்டு வந்தார்

இது குறித்து  குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார் பனமடங்கி  வனவர் குமரேசன், வனக்காவலர் லோகநாதன், வனக்காப்பாளர் தணிகைவேல் விவசாயி மீட்ட குட்டி புள்ளிமானை வடுவந்தாங்கல் வன காப்பு காட்டில் மான் குட்டியை விட்டனர் மான் குட்டி துள்ளி குதித்து ஓடியது.

மீட்கப்பட்ட குட்டி பெண் புள்ளி மானை அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி