அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
அரக்கோணத்தை அடுத்த கோணலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம்மாள் (வயது 55). இவர் நேற்று(நவ.5) காலை வீட்டில் வாட்டர் ஹீட்டர் போடுவதற்காக ஸ்விட்ச்சை ஆன் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.