முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

74பார்த்தது
முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2024-2025-ம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வது நேற்று முதல் தொடங்கியது. இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்ய அடுத்த மாதம் ஆகஸ்டு 8-ந் தேதி கடைசி நாளாகும்.

13-ந் தேதி சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்கலாம்.

20-ந் தேதி பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www. tngasa. in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பி. வாசுகி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி