ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.,18) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 33 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுதாரர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில், இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார், காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.