வாலாஜாபேட்டை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் தேவ குமார் (வயது 47), ஆட்டோ டிரைவர். இவர் தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.