திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கடந்த 13, 14 தேதிகள் மற்றும் இன்று மாலை 7 மணி நிலவரப்படி, 1.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற உள்ளது.