தைப்பூசத்திற்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பலரும் பழனிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவார்கள். தைப்பூசம் வருகிற பிப்ரவரி 11 2025-ம் ஆண்டு செவ்வாய்க்கிழமை வருகிறது. எனவே விரதம் இருப்பவர்கள் டிசம்பர் 25, 2024 புதன்கிழமை தொடங்கி, பிப்ரவரி 10-ம் தேதி அன்று நிறைவு செய்துவிடலாம். 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் சைவ உணவுகளை உண்டு, காலை, மாலை இருவேளை குளித்து, முருகனை மனம் உருகி பிராத்திக்க வேண்டும்.