கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் (டிச.13) காலையில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை கிடந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றினர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அட்டியூர் ரஹ்மான் லஸ்கர் (35) என்ற நபர் தனது சகோதரின் மனைவி தனது ஆசைக்கு இணங்காததால் அப்பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.