விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகிய நிலையில், விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்" என கூறப்பட்டுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைவார் என அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.