தமிழக பாஜகவின் புதிய தலைவர் வெற்றிக்கு வழிநடத்துவார் என மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். "நமது ஒரே இலக்கு இந்த திமுக ஆட்சியை 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது. உங்களை எல்லாம் வழிநடத்தியதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த கட்சியின் தொண்டராக இருப்பதே பெருமை தான். ஆன்மா நிறைந்த கட்சியை நயினார் நாகேந்திரன் வழிநடத்த போகிறார். நமது இலக்கு, பாதை தெளிவாகியுள்ளது, நயினார் தான் புதிய தலைவர்" என்றார்.