ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் கும்மினிப்பேட்டையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று (செப் 29) மாலை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம். எல். ஏ சு. ரவி கலந்துகொண்டு பேசினார். மாவட்ட அவைத் தலைவர் சம்பத், நகர செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.