திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரை அடுத்த கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார் இவரது மூத்த மகன் பாலவிஷ்ணு (வயது 18). குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்ததால், மகனின் படிப்புக்காக குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்துள்ளனர்.
பிளஸ்-2 முடித்த பாலவிஷ்ணு சில நாட்களுக்கு முன்பு மேல்பட்டி அருகே உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் முருகனும் அவரது மனைவியும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த பாலவிஷ்ணு தனது உறவினர்களுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர் அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாலவிஷ்ணு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து மாணவர் பாலவிஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.