வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி வடிவாம்பாள் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அவர்கள் திருமணமாகி சென்னையில் ஒரு மகளும் பெங்களூரில் ஒரு மகளும் வசித்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி இறந்துவிட்ட நிலையில் வடிவாம்பாள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது மகள்கள் தாயார் வடிவாம்பாளை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போன் எடுக்கவில்லை
இதனால் சந்தேகம் அடைந்து அவர்கள் போலீசார் உதவி 100 எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகர போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று வடிவாம்பாள் வீட்டு உள்பாக்க கதவு புட்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வடிவாம்பாள் இரண்டு நாட்களுக்கு முன்பு தவறி கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டு நகர முடியமால் இருந்துள்ளார்.
உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. திடீரென வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மூதாட்டியில் வீட்டில் கதவை உடைத்து அவரை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.