நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பில் அரசியல் குறித்து பேசியாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், அவதூறுகளை கடக்க முடியாதவன் அற்ப வெற்றியைக் கூட தொட முடியாது. சங்கி என்றால் சக தோழன் என்று அர்த்தம். உண்மையான சங்கிகள் எங்களை சங்கிகள் என கூறுகிறார்கள். சம்பந்திகள் போல் பிரதமரும், முதல்வரும் சந்திக்கிறார்கள். ஆனால் வெளியே வந்து எங்களை சங்கி என்கிறீர்கள். திமுகவே எதிர்த்தாலே சங்கியா? என கேள்வியெழுப்பினார்.