வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியில் குடியாத்தம் தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா சுமோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மூன்று மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருட்களை கடத்தி வந்த மஞ்சுநாதன்( 40) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆந்திராவில் இருந்து ஹான்ஸ் குட்கா போதை பொருட்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ மற்றும் 20 கிலோ ஹான்ஸ் குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.