ரூ.33 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடந்தது. கோவை சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று (நவ., 18) நடைபெற்ற ஏலத்தில் 156 விவசாயிகள் கலந்து கொண்டனர். சுமார் 1,200 மூட்டைகள் நிலக்கடலையை கொண்டுவந்து இருந்தனர். திருப்பூர், ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் கலந்து கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,010 முதல் ரூ.7,456 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,626 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலத்தில் எடுத்தனர்.