வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (வயது 34). இவரது உறவினர் சபின் நிஷா (55). இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சபின் நிஷா பாகாயத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததார்.
அப்போது அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சபின் நிஷா வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து வேலூர் -ஆரணி ரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி சபின் நிஷா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் விரைந்து சென்று சபின் நிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.