வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. 320 ரன் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.