மோடி திமுகவை தாக்கி பேசுவது அரசியல் சீசன் என அமைச்சர் பேட்டி

573பார்த்தது
மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த விடாமல் தமிழக அரசு தடுக்கிறது மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு. மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும். பாஜக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்தை போட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்களே. பிஜேபி அதிமுகவினரின் தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும். பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள். பிரதமர் திமுகவை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறாரே என கேட்டதற்கு, இவ்வளவு நாள் திமுகவை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் திமுகவை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன் சார்.
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களே என கேட்டதற்க்கு. அரசியல் கட்சி இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள் அது அரசியல் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி