சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி

82பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் கிராமம் அருகே இரண்டு காப்புக்ககாடு மலைகள் உள்ளன. இந்த மலைகளில் அடிவாரத்தில் ஆடுகள் மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்காக பூங்குளம் மற்றும் ரங்கசமுத்திரம், ஏரிகொல்லை, நாலுகல் மலை, சேம்பள்ளி, மீனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு வருவார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளும் சண்முகம் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகளும் சிறுத்தை தாக்கி பலியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலின் போது சாமிநாதன் கண் முன்னே ஆட்டை சிறுத்தை தாக்க முயன்றுள்ளது அப்போது சாமிநாதன் கூச்சலிட்டதில் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த ஆட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் கால்நடைகளை மோய்ச்சலுக்காக கொண்டு செல்லவும் இரவு நேரங்களில் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை கத்துவதால் வீட்டை விட்டு வெளியே வர அச்சமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி கிராம மக்கள். சிறுத்தை தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி