இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஆட்சியர் உத்தரவு

67பார்த்தது
வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்ற 803 மாணவர்களை கண்டுபிடித்து மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடை நின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை வட்டார வளர்ச்சித்துறை ஆகியோரை கொண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி வருவாய் கோட்டாட்ச்சியர் சுமதி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதில் இம்மாவட்டத்தில் பள்ளிகளில் இடை நின்ற 803 மாணவ, மாணவிகள் இடை நின்றது கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து கல்வி கற்க அவர்கள் முகவரிகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் பேசி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி