கஞ்சா கடத்தி வந்த பெங்களூர் வாலிபர்கள் கைது

4191பார்த்தது
கஞ்சா கடத்தி வந்த பெங்களூர் வாலிபர்கள் கைது
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் காட்பாடி ரயில் நிலையம் அருகே நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகப்படும் வகையில் மூன்று பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த கௌதம், பாபி, பிரவீனவ் என்பது தெரியவந்தது. அவர்கள் ஒடிசாவில் இருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் அதைத் தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி