தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 1250 டன் ரேஷன் அரிசி திருவாரூர் மாவட்டத்திலிருந்து நேற்று காலை காட்பாடிக்கு சரக்கு ரயில் மூலம் வந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் தாலுகா வாரியாக உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ள பாமாயில் துவரம் பருப்பு ஆகியவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தலா 1250 டன் ரேஷன் அரிசி தஞ்சாவூரில் இருந்து ரயில் மூலம் கடந்த வாரம் காட்பாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.