கள்ளத்தனமாக திருடி வந்து பதுக்கி வைக்கப்பட்ட 30 யூனிட் மணல்

605பார்த்தது
வேலூர் மாவட்டம்

*காட்பாடி அருகே கள்ளத்தனமாக திருடி வந்து பதுக்கி வைக்கப்பட்ட 30 யூனிட் மணல்*

*தட்டி தூக்கிய காட்பாடி வருவாய்த்துறை அதிகாரிகள்*

வேலூர் மாவட்டத்தில் நீர் ஆதாரமாக விளங்கிவரும் வேலூர் பாலாற்றில் இருந்து அவ்வப்போது மணல் திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் பாலாற்றில் இருந்து மணல் திருடி வந்து பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காட்பாடி வட்டாட்சியர் சரவணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனை அடுத்து காட்பாடி வட்டாட்சியர் சரவணன் தலையினால வருவாய் துறை அதிகாரிகள் திருவலம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்

அப்போது திருவலம் சிவானந்தா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாலாற்றில் இருந்து மணல் திருடி வந்து பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

பறிமுதல் செய்த 30 யூனிட் மணலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூபாய்1, 84, 745 ஏலம் விட்டு அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி