வேலூரில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்

73பார்த்தது
வேலூரில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்
வேலூர் சத்துவாச்சாரியில் அங்கன்வாடி மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்ட முகாம் இன்று துவங்கப்பட்டது. இதனை ஆட்சியர் துவங்கி வைத்தார். இன்று முதல் வைட்டமின் ஏ திரவம் அளிக்கும் இம்முகாம் வரும் 22 ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடக்கிறது. துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலமாக சுமார் 1,244 பணியாளர்கள் சுமார் 98,229 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. இந்த வைட்டமின் குறைபாடுகளால் மாலைக்கண் பார்வை இழப்பு, வயிற்றுப்போக்கு, நிமோனியா உள்ளிட்டவைகள் ஏற்படும். எனவே, ஊட்டச்சத்து குறைபாடுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள திரவ சொட்டு மருந்தை அளிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி