*ஜோலார்பேட்டை அருகே மீன் வலை அறுத்துவிட்ட தகராறில் தாக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு. அண்ணன் தம்பி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்*.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்னூர் ஊரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் இவரது மகன் குமரன் ( 24)
சில தினங்களுக்கு முன் இவர் தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க வலை விரித்து வைத்திருந்ததாக தெரிகிறது. அப்போது கட்டேரி கே. ஆர். எஸ் வட்டம் பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் பிரபு என்பவர் மீன் வலையில் இருந்து மீன்களை எடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து மீன் வலை அருந்து உள்ளதை கண்ட குமரன் மற்றும் இவரது சகோதரர்கள் சுரஷ் (36) சிங்காரவேலன் (27) மற்றும் உறவினர் முரளி (வயது 33) ஆகிய 4 பேரும் மீன் வலையை ஏன் அறுத்தாய் என்று கேட்டு தகராறு செய்ததை தொடர்ந்து இது சம்பந்தமாக இவரது அண்ணன் சத்தியமூர்த்தியிடம் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து பேசிக் கொள்ளலாம் உன்னுடைய தம்பியை அழைத்து வா என்று கூறியுள்ளனர்.