காலாவதியான கள்ளச்சாராயம் விற்பனை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

71பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியையொட்டியுள்ள மலைப்பகுதிகளில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை கருப்பு, மற்றும் ஆரஞ்சு வெள்ளை நிறத்தில், குளிர்பானங்கள் போல மாற்றி, வாணியம்பாடி சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளான வாணியம்பாடி நகரம், வாராச் சந்தை, கச்சேரி சாலை, ஆற்றுமேடு, மற்றும் கிராம பகுதிகளில் சாராய வியாபாரிகள் நூதன முறையில் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவிரி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அதன் பிறகு சற்று தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கள்ள சாராய விற்பனை சூடு பிடித்துள்ளது.

போனா வந்தா கிடைக்காது, பொழுது போனா சிக்காது என்பதற்கு ஏற்ப காலை மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்வது போல் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி