காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2018-ல் உடல் முழுவதும் வீங்கிய நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். சிறுவன் அதிகமாக சிப்ஸ்களை சாப்பிட்டதால் உடலில் உப்பு அதிகரித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். தற்போது வரை டயாலிஸிஸ் செய்து வரும் சிறுவனுக்கு மருத்துவ உதவி வழங்க பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.