புது வசூர் பாலாற்றங்கரையில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

53பார்த்தது
புது வசூர் பாலாற்றங்கரையில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
புதுவசூர்பாளாற்றங்கரையில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அகிலம் மகளிர் கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் இணைந்து வேலூரை அடுத்த புது வசூர் பாலாற்றங்கரையோரம் நூறு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தலைமை தாங்கினார். அக்ரியம் கல்லூரி பேராசிரியர் அனிதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலு திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஒரு மரக்கன்று நட்டு 100 மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து கல்லூரி தேசிய மாணவர் படை மாணவிகள் சுமார் 60 அடி உயரம் வரை வளரும் தான்றிக்காய் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை செய்து இருந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கூறுகையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பாலாற்றங்கரையோரம் விரைவில் 5000 மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி