தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் உள்ள தன்னுடைய சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தார் தமிழக பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து மலர் தூவி தலைப்பாகை சூடி வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தபடி சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.