*நாட்றம்பள்ளி அருகே தூக்க கலக்கத்தில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி ஓட்டுநர் உயிரிழப்பு*
உத்தரப் பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த
அப்சர் கான் மகன் அன்வர் கான் இவர் வி-டிரான்ஸ்போர்ட்டில் பார்சல் சர்வீஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து பார்சல்களை சென்னை நோக்கி டெலிவரி செய்ய வந்துள்ளார்.
அப்போது இன்று நாட்றம்பள்ளி அருகே உள்ள ஏழரைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது தூக்க கலக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து அருகே உள்ள 25 அடி பள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் ஓட்டுனரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ஓட்டுனரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.