தமிழக அரசு, கடந்தாண்டில் சாலை பாதுகாப்புக்காக ரூ.54 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் வாயிலாக, சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க முடியவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக சென்னை ஐஐடி அறிக்கை தயாரித்து, தமிழக அரசு போக்குவரத்து ஆணையரகத்திடம் வழங்கியுள்ளது. இதில், 66% விபத்துக்கள் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பதாக கூறப்படுகிறது.