கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

62பார்த்தது
கர்நாடகா: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கார் மற்றும் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது, சிக்கின்துவாடி பகுதியருகே அவர்களின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேர் உயிரிழந்துள்ளனர்.