பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

54பார்த்தது
பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாட்களில் ஆடிக்கிருத்திகையும் ஒன்றாகும். இந்த நாளில் முருகப் பெருமானின் கோவில்கள் அனைத்திலும் விழா எடுத்துக் கொண்டாடுவார்கள். அதன்படி ஆடி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

பரணி காவடி எடுத்து பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் திருத்தணிக்கு செல்வதை காண முடிகிறது. பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் சார்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் நேற்று காலை முதல் இயக்கப்பட்டது. காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் பஸ்களில் ஏறி திருத்தணிக்கு பயணம் செய்தனர். மேலும் மாலையில் அதிகப்படியான பக்தர்கள் புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர். பக்தர்கள் பலர் குடும்பத்துடன் திருத்தணிக்கு சென்றனர். இதனால் புதிய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி